< Back
மாநில செய்திகள்
டிரோன் பறக்க தடை
விருதுநகர்
மாநில செய்திகள்

டிரோன் பறக்க தடை

தினத்தந்தி
|
4 March 2023 7:31 PM GMT

முதல்-அமைச்சர் செல்லும் பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) நெல்லைக்கு விருதுநகர் வழியாக செல்வதாலும், நாளை மறுநாள் நெல்லையில் இருந்து மதுரைக்கு விருதுநகர் வழியாக வர உள்ளதாலும் அவர் செல்லும் இடங்கள் பாதை அனைத்துமே சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆளில்லா விமான (டிரோன்) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்