< Back
மாநில செய்திகள்
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
மாநில செய்திகள்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

தினத்தந்தி
|
28 July 2022 3:24 PM IST

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து காணப்படும். நேற்று கொடைக்கானல் மற்றும் அருவி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்