< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை: காரணம் என்ன?

கோப்பு படம்

மாநில செய்திகள்

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை: காரணம் என்ன?

தினத்தந்தி
|
14 Nov 2023 3:25 PM IST

ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள நிலையில், பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்,

இலங்கை அருகே கடல் பகுதியில் இன்று நண்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. தலைநகர் கொழும்புவில் இருந்து தென் கிழக்கே 1,326 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொழும்புவிலும் நன்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் குவிந்துள்ள நிலையில், பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்