கள்ளக்குறிச்சி
மூங்கில் மரங்கள் எரிந்து நாசம்
|தியாகதுருகம் மலைப்பகுதியில் மூங்கில் மரங்கள் எரிந்து நாசம்
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலையை சுற்றி வேப்பம், மூங்கில் உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள் மற்றும் செடிகள் அடர்ந்து காணப்படுகின்றன. இந்த மலையை சுற்றி உள்ள மரத்தின் நிழலில் அமர்ந்து பலரும் மது அருந்துகின்றனர். மலைப்பகுதிக்கு வரும் சில சமூக விரோதிகள் புகைப்பிடித்துவிட்டு தீயை அணைக்காமல் வீசிவிட்டு செல்வதால் மலைப்பகுதியில் உள்ள காய்ந்த சறுகுகள் தீப்பிடித்து எரிவதாக கூறப்படுகிறது. இவ்வாறு நேற்று காய்ந்த சருகுகளில் தீப்பிடித்து எரிந்த தீ மூங்கில் தோப்புக்குள் பரவியதால் அவை எரிந்து நாசமானது. தற்போது வறட்சி காலம் தொடங்கி இருப்பதால் சமூக விரோதிகளால் அவ்வப்போது தீ விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளது. எனவே மலையை சுற்றி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.