< Back
மாநில செய்திகள்
மூங்கில்துறைப்பட்டில் வியாபாரிகள் கடையடைப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மூங்கில்துறைப்பட்டில் வியாபாரிகள் கடையடைப்பு

தினத்தந்தி
|
26 Aug 2023 12:15 AM IST

வாணாபுரம் தாலுகா பிரித்ததை மறுபரிசீலனை செய்யக்கோரி மூங்கில்துறைப்பட்டில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த மாவட்ட பொருளாளர் ராமமுத்துக்கருப்பன், சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சேகர், மாநில இணை செயலாளர் ஏ.எஸ்.வாசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மூங்கில்துறைப்பட்டுஅனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் கனகராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் மூங்கில்துறைப்படை பிரித்து புதிய தாலுகாவான வாணாபுரத்தில் இணைத்ததை மறுபரிசீலனை செய்யக்கோரி அடுத்த மாதம்(செப்டம்பர்) 5-ந் தேதி மூங்கில்துறைப்பட்டில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து, கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை மூங்கில்துறைப்பட்டு 4 முனை சந்திப்பில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கோகுல்ராம் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்