ராமநாதபுரம்
பாமா ருக்மணி-கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்
|சாயல்குடி அருகே பாமா ருக்மணி-கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளம் ஊராட்சி எஸ்.ஆலங்குளம் கிராமத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ேகாவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோமாதா பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசை, வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு கோவில் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு கும்ப நீர், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட மூலிகை திரவிய அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை எஸ். ஆலங்குளம் கிராம பொதுமக்கள், கிராம நிர்வாகிகள், விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.