< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

'நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும்' - திருமாவளவன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
23 Dec 2023 2:31 AM IST

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"இ.வி.எம். எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் முறைகேடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பல்வேறு ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை வல்லுனர்கள் ஆதாரங்களோடு நிறுவி வருகிறார்கள். எனவே எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை வாக்குச்சீட்டு முறைப்படி நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்