< Back
மாநில செய்திகள்
பாலியம்மனுக்கு பால்குட அபிஷேகம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

பாலியம்மனுக்கு பால்குட அபிஷேகம்

தினத்தந்தி
|
6 Aug 2022 12:07 AM IST

சந்தவாசலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பாலியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்தனர்.

கண்ணமங்கலம்

சந்தவாசலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு பாலியம்மன் கோவிலுக்கு பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் கிராம தேவதை பாலியம்மனுக்கு ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு 205 பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள துவரந்தல் கிராமத்தில் காளியம்மன் கோவிலில் பக்தர்கள் 108பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று அபிஷேகம் செய்தனர். ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்