< Back
மாநில செய்திகள்
பாலசுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பாலசுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
4 Dec 2022 6:30 PM GMT

அருளம்பாடி பாலசுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அருளம்பாடியில் புதிதாக கட்டப்பட்ட பாலசுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜை, 108 பசுமாடு மற்றும் கன்றுகளுக்கு விசேஷ கோ பூஜை நடைபெற்றது. நேற்று முன் தினம் காலை 10 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வசனம், மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், உள்ளிட்ட பூஜைகளும், நேற்று காலை 4 மணிக்கு விக்னேஸ்வர அபிஷேகம், 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார் பனம், ரக்க்ஷாபந்தன், அதைத் தொடர்ந்து முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது. இரவு 9 மணிக்கு கோபுர கலசங்களுக்கு பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் நடைபெற்றது. பின்னர் நேற்று காலை 6 மணிக்கு 2-வது கால யாகபூஜை, தொடர்ந்து கோ பூஜை, நாடி சந்தானம், விசேஷ மூல மந்திர ஹேமங்கள் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் கோபுர விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விநாயகர், மாரியம்மன், கங்கையம்மன், ஓம்சக்தி, அய்யனார் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவில் கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அருளம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளான கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

மேலும் செய்திகள்