< Back
மாநில செய்திகள்
பாலசுப்பிரமணி கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பாலசுப்பிரமணி கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
25 July 2022 5:19 PM GMT

அருளம்பாடி பாலசுப்பிரமணி கோவில் கும்பாபிஷேகம்

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அருளம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலசுப்பிரமணி, கங்கையம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரதேச பலி, கும்ப அலங்காரம், மூலமந்திர ஹோமம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், நாடி சந்தானம், கோ பூஜை, சூரிய பூஜை, சந்திர பூஜை, எல்லை பூஜை, சகலவித திவ்ய ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அருளம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்