< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
கரபுரநாதர் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி
|22 Aug 2022 12:57 AM IST
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
கொண்டலாம்பட்டி:-
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரத்தில் பெரிய நாயகி சமேத கரபுரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருப்பணி தொடங்கும் விழாவாக பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் பாலாலயம் நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.