< Back
மாநில செய்திகள்
ஆ.ராசா குறித்து அவதூறாக பேசியதாக பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
மாநில செய்திகள்

ஆ.ராசா குறித்து அவதூறாக பேசியதாக பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

தினத்தந்தி
|
21 Sept 2022 10:29 AM IST

கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை,,

அண்மையில் பீளமேடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசாவை மிரட்டும் வகையில் உத்தம ராமசாமி பேசியிருந்தார். இது போன்ற கருத்துக்களுக்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். பாலாஜி உத்தமராமசாமி கைதை கண்டித்து, பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

`இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை கைது செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் உத்தமராமசாமியை நீதிமன்ற காவலில் 15 நாள் சிறையில் வைக்க கோவை நீதிமன்ற நீதிபதி செந்தில்ராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் கோவையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்