< Back
மாநில செய்திகள்
நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு

தினத்தந்தி
|
8 July 2023 12:15 AM IST

நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு நடத்தினார்.

நாலாட்டின்புத்தூர்:

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கோப்புகள் மற்றும் பராமரிக்கபடும் ஆவணங்களை சரி பார்த்தார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த கேமராக்களை முறையாக பராமரிக்க போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் போலீஸ் நிலைய பகுதியில் முறையாக ரோந்து பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, சப-்இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்