< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
|30 Jun 2023 12:15 AM IST
செங்கோட்டையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் சுலைமான் நபி ஜூம்மா பள்ளிவாசலில் பள்ளி இமாம் செய்யது சுல்தான் பைஜி சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது பட்டாணி, துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் காசுக்கடை பஜாரில் மாவட்ட துணை செயலாளர் செய்யது அலி தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் பம்பஹவுஸ்ரோடு, டவுண்ஹால் ரோடு, செங்கோட்டை மேலூர் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளி, காதர்ஒலி ஜூம்மா பள்ளி, தஞ்சாவூர் தெரு மஸ்ஜிதுன்நூர் ஜூம்மா பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர்.