< Back
மாநில செய்திகள்
பக்ரீத் பண்டிகை - புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
மாநில செய்திகள்

பக்ரீத் பண்டிகை - புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
10 July 2022 8:20 AM IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சென்னை,

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

பக்ரீத் என்பது உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இது ரம்ஜான் கொண்டாட்டம் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு 4 நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும். தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த கொண்டாட்டம் சுல் ஹிஜ்ரா என்ற அரேபிய மாதத்தின் பத்தாவது நாள் கொண்டாடப்படுகிறது. 'ஈத் அல்-அதா' என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர். நாகூர் தர்காவிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத்தகைய பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்