< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
|30 Jun 2023 4:00 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
காஞ்சீபுரம் நசரத்பேட்டை ஷேக் முஹம்மது அலி ஜும்மா மசூதி, ஓரிக்கை ஜும்மா மசூதி, மதீனா மசூதி, ஒலி முஹம்மது பிஎஸ்கே தெரு இஸ்பந்தியர் ஜும்மா மசூதி, கீழ்க்கேட் காமாட்சி காலனி மசூதி, வைகுண்ட பெருமாள் கோவில் தெரு சாதத்துல்லா கான் ஜும்மா மசூதி, ரெட்டிப்பேட்டை ஹமிதியா மதர்ஸா மசூதி, ஒலி முஹம்மது பேட்டை ஜண்டா மசூதி, ஈத்கா திடல் தொழுகை, காந்தி ரோடு கைருல்லா ஜும்மா மசூதி போன்ற இடங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
திரளான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.