திருவாரூர்
பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
|திருவாரூரில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.
திருவாரூரில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.
பக்ரீத் பண்டிகை
தியாகத்தை நினைவு கூறும் பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று திருவாரூர் பகுதியில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் கொடிக்கால்பாளையம் மொய்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல், ஜாமில் மஸ்ஜித் பள்ளிவாசல், விஜயபுரம் மஸ்ஜிதுல் பிர்தவுஸ் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி திடலில் த.மு.மு.க. உள்ளிட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் கொடிக்கால்பாளையம் நகராட்சி பள்ளியில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு தொழுகை நடத்தினர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் பகுதியில் பக்ரீத் திருநாளை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனை முன்னிட்டு நீடாமங்கலம் கீழத்தெரு பள்ளிவாசல், பழைய நீடாமங்கலம் பள்ளிவாசல், கோவில்வெண்ணி பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். அப்போது இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.