திருவண்ணாமலை
பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
|தண்டராம்பட்டு அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 15 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 15 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.
பேக்கரி உரிமையாளர்
தண்டராம்பட்டு அருகில் உள்ள காவேரி பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் வயது 49 அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சங்கம் சாலையில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் அய்யனார் வழக்கம் போல கடைக்கு சென்று விட்டார் அவரது மனைவி பண்டிதம்பட்டில் உள்ள உறவினர் நிகழ்ச்சி ஒன்றுக்கு வீட்டை பூட்டி கொண்டு சென்று உள்ளார்.
15 பவுன் நகை திருட்டு
மீண்டும் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 15 பவுன் நகையையும் வெள்ளி பொருட்களையும் மர்ம ஆசாமிகளால் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கணவர் அய்யனாருக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து தண்டராம்பட்டு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருக்கலாம் என தெரிகிறது.