< Back
மாநில செய்திகள்
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மாநில செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தினத்தந்தி
|
26 Sept 2024 11:36 AM IST

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது

சென்னை,

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.

இதன்படி, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ள நிலையில், சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செந்தில் பாலாஜியின் சொந்த தொகுதியான கரூரில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்