< Back
மாநில செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் உடையில் இளைஞர் செய்த பகீர் சம்பவம்
மாநில செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் உடையில் இளைஞர் செய்த பகீர் சம்பவம்

தினத்தந்தி
|
3 Sept 2022 7:34 PM IST

அருப்புக்கோட்டையில் இளைஞர் ஒருவர் டாக்டர் போல் உடை அணிந்து செவிலியர் விடுதிக்குள் நுழைந்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் நர்சு ஒருவர் அங்குள்ள செவிலியர் விடுதியில் தங்கி உள்ளார். இந்த நிலையில் பாளையம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவர் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே சென்றுள்ளார். அவர் டாக்டர் போல் உடை அணிந்து செவிலியர் விடுதியில் தங்கியிருந்த நர்சிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர் செவிலியரை கன்னத்தில் கடித்து உள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் செவிலியர் சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த சிலர் விடுதிக்குள் நுழைந்த மணிகண்டனை பிடித்து வைத்துகொண்டு அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் நர்சை தாக்கிய மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து வாலிபர் கடித்ததில் காயமடைந்த நர்சுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதி மக்கள் மத்தியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்