< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொள்ளாச்சி அருகே வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் படுகாயம்..!
|18 Nov 2022 8:22 PM IST
பொள்ளாச்சி அருகே வளர்ப்பு யானை தாக்கியதில் படுகாயமடைந்த பாகனுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே வளர்ப்பு யானை தாக்கியதில் படுகாயமடைந்த பாகனுக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் சுயம்பு எனும் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக யானை சுயம்புக்கு மஸ்த்து பிடித்த நிலையில், மாற்றி கட்டுவதற்காக யானையை அழைத்துச் சென்றபோது, பாகன் பிரசாத்தை பலமாக தாக்கியது.
இதையடுத்து காயமடைந்த பிரசாத் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். பாகன் பிரசாத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வனத்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.