< Back
மாநில செய்திகள்
யாழ்ப்பாணத்தில் மோசமான வானிலை: 25 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை திரும்பியது
மாநில செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மோசமான வானிலை: 25 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை திரும்பியது

தினத்தந்தி
|
14 Nov 2023 2:48 AM IST

யாழ்ப்பாணத்தில் மழையால் மோசமான வானிலை நிலவுதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் யாழ்ப்பாணத்தில் தரை இறங்க முடியாததால் மீண்டும் சென்னைக்கு திரும்பியது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு வழக்கமாக காலை 10.15 மணிக்கு புறப்பட்டு சென்று பகல் 2 மணிக்கு திரும்பி வந்து சேரும். நேற்று காலை 10.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் தாமதமாக காலை 10.50 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்றது. இதில் 25 பயணிகளுடன் விமானம் சென்ற போது யாழ்ப்பாணத்தில் மழையால் மோசமான வானிலை நிலவுதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் யாழ்ப்பாணத்தில் தரை இறங்க முடியாததால் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்