< Back
மாநில செய்திகள்
பெங்களூருவில் நிலவிய மோசமான வானிலை; சென்னைக்கு வந்து தரையிறங்கிய விமானங்கள்
மாநில செய்திகள்

பெங்களூருவில் நிலவிய மோசமான வானிலை; சென்னைக்கு வந்து தரையிறங்கிய விமானங்கள்

தினத்தந்தி
|
12 May 2023 4:27 PM IST

மோசமான வானிலையால் பெங்களூருவில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.

சென்னை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மோசமான வானிலை நிலவியதால், அங்கு தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன. கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் உள்ளிட்ட 14 விமானங்கள், மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து நேற்று நள்ளிரவில் தரையிறங்கின. இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அங்கு வந்திறங்கிய பயணிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பின்னர் பெங்களூருவில் வானிலை சீரானதும், அனைத்து விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பெங்களூருவுக்கு புறப்பட்டுச் சென்றன.


மேலும் செய்திகள்