< Back
மாநில செய்திகள்
குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம்

தினத்தந்தி
|
18 July 2022 8:40 PM IST

நாகை காடம்பாடியில் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிப்பாளையம்:

நாகை காடம்பாடியில் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பட்டன் குளம்

நாகை காடம்பாடியில் புது முகமதியார் தெரு உள்ளது. இந்த தெருவில் ஆயிரத்து 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அம்பட்டன் குளம் உள்ளது. சுமார் 6 ஏக்கரில் இருந்த இந்த குளத்தைபொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர்.6 ஏக்கரில் இருந்த குளம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு, 2 ஏக்கராக காணப்படுகிறது.

துர்நாற்றம்

மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த குளத்தில் குப்பைகளை கொட்டுவதால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை உள்ளது.

குப்பைகள் கொட்டப்படுவதால் குளத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்