< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
தா.பழூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
|20 May 2022 2:09 AM IST
தா.பழூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 120 கர்ப்பிணிகளுக்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மாலை அணிவித்தனர். பின்னர் அவர்களது கைகளில் வளையல் அணிவித்து வளைகாப்பு செய்து வைத்தனர். இதில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி, புகழேந்தி, குமரி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு மதிய விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகப்பேறு காலத்தில் கர்ப்பிணிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.