நாமக்கல்
பாண்டமங்கலத்தில்கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
|பரமத்திவேலூர்:
பாண்டமங்கலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. கபிலர்மலை ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா வரவேற்றார். வட்டார அட்மா தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர், துணை தலைவர் பெருமாள் என்ற முருகவேல், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் 100 கர்ப்பிணிகளுக்கு டாக்டர் சித்ரா மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கர்ப்பிணிகளுக்கு சீர்த்தட்டு, சேலை, வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம், அனைவருக்கும் 5 வகையான கலவை உணவுகள் வழங்கப்பட்டன. முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மனோஜ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளர் ஜானகி, மேற்பார்வையாளர்கள் அன்னபூர்ணம், ராமாயி, மணிமேகலை இளநிலை உதவியாளர் சாந்தி மற்றும் அலுவலக உதவியாளர் முகமது தாவூத் ஆகியோர் செய்திருந்தனர்.