< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
|9 Oct 2022 12:20 AM IST
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா ஒன்றிய தலைவர் சிந்துமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து கர்ப்ப காலத்தில் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த கையேடு வழங்கப்பட்டது. பின்னர் கர்ப்பிணிகளுக்கு 5 வகையான உணவு பரிமாறப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையினர் செய்திருந்தனர்.