< Back
மாநில செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

தினத்தந்தி
|
4 Sept 2022 10:16 PM IST

விழுப்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி முன்னிலை வகித்தார். நிலைய மருத்துவ அலுவலர் ஜோதி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் .லட்சுமணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.

இவ்விழாவில் சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர்கள் பாக்கியலட்சுமி, மதன், ஒருங்கிணைப்பாளர் மனோசித்ரா, இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் திருமாவளவன், செல்வராஜ், நகரமன்ற கவுன்சிலர் மணவாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்