< Back
மாநில செய்திகள்
கோயம்பேடு காவல்நிலையத்தில் கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு விழா
மாநில செய்திகள்

கோயம்பேடு காவல்நிலையத்தில் கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு விழா

தினத்தந்தி
|
2 Aug 2023 11:07 PM IST

போலீசார் இணைந்து பெண் காவலருக்கு வளைகாப்பு விழா நடத்தினர்.

சென்னை,

தூத்துக்குடியைச் சேர்ந்த பரிசுத்த இமானுவேல் என்பவரின் மனைவி ஜெபா, சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஜெபா, குழந்தை பிறப்புக்காக விடுமுறையில் சொந்த ஊருக்குச் செல்ல உள்ளார்.

இந்த நிலையில் ஜெபாவிற்கு கோயம்பேடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்கள் ரமேஷ் கண்ணா, மகேஷ்வரி மற்றும் போலீசார் இணைந்து வளைகாப்பு விழா நடத்தினர். இதில் தாய் வீட்டு சீதனம் போல் சீர்வரிசை தட்டுகளில் பழம், இனிப்பு வகைகளை வைத்து ஏழு விதமான சாதங்களைக் கொடுத்து வளைகாப்பு விழாவை நடத்தி வாழ்த்தினர்.


மேலும் செய்திகள்