< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
புழல் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு
|3 Sept 2023 11:32 AM IST
புழல்,
சென்னையை அடுத்த புழல் போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருபவர் பிரியா. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பெண் போலீஸ் பிரியா, அவருடைய கணவருடன் புழல் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சதீஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் மற்றும் ஆண் போலீசார் என அனைவரும் இதில் கலந்து கொண்டு கர்ப்பிணியான பிரியாவுக்கு நலங்கு வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரியா, தனக்கு வளைகாப்பு நடத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.