< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
சென்னை புழல் காவல் நிலையத்தில் கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு விழா

3 Sept 2023 3:06 AM IST
போலீசார் இணைந்து பெண் காவலருக்கு வளைகாப்பு விழா நடத்தினர்.
சென்னை,
சென்னை புழல் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் பிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு விழா நடத்தி அழகு பார்க்க நினைத்த சக காவலர்கள், இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றனர்.
இதையடுத்து காவலர் பிரியாவுக்கு புழல் காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் துணை காவல் ஆணையர் சக்திவேல் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள், பிரியாவுக்கு ஆரத்தி எடுத்து, நலங்கு வைத்து, கையில் வளையல் அணிவித்து வளைகாப்பு விழாவை நடத்தி வாழ்த்தினர்.