< Back
மாநில செய்திகள்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

தினத்தந்தி
|
19 Oct 2023 2:25 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த 100 கர்ப்பிணி பெண்களுக்கு நேற்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்து பயனாளிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணைத் தலைவர் மாலதி குணசேகரன், பெத்திக்குப்பம் ஊராட்சி தலைவர் ஜீவா செல்வம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்