< Back
மாநில செய்திகள்
ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை
அரியலூர்
மாநில செய்திகள்

ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை

தினத்தந்தி
|
18 Nov 2022 12:15 AM IST

ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை பிறந்தது.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி கொட்டாத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ரஞ்சிதா(22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு தகவல் அறிந்து ரஞ்சிதாவின் வீட்டிற்கு வந்த ஆம்புலன்ஸ் ரஞ்சிதாவை ஏற்றிக்கொண்டு புறப்படும் சமயத்தில் ரஞ்சிதாவிற்கு பிரசவ வலி அதிகரித்து பின்பு ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆம்புலன்சில் பணியாற்றும் மருத்துவ செவிலியர் கமல விநாயகி, ஆம்புலன்ஸ் டிரைவர் சத்யராஜ் ஆகியோர் பிரசவத்திற்கு தேவையான உதவிகளை செய்தனர். பின்பு தாய் சேய் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து சிகிச்சைக்காக அருகே உள்ள குணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்பு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசர காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்