< Back
மாநில செய்திகள்
பல்லடம் அருகே ெபண் சிசு உடல் சாலையோரம் வீச்சு
திருப்பூர்
மாநில செய்திகள்

பல்லடம் அருகே ெபண் சிசு உடல் சாலையோரம் வீச்சு

தினத்தந்தி
|
16 Oct 2022 3:34 AM IST

பல்லடம் அருகே ெபண் சிசு உடல் சாலையோரம் வீசப்பட்டது.


பல்லடம் அருகே ெபண் சிசு உடல் சாலையோரம் வீசப்பட்டது.

பல்லடம் அருகே தெற்கு பாளையம் பிராமிஸ் நகர் பகுதியில், சுமார் 100-க்்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. நேற்று இந்த குடியிருப்புக்கு பின் பகுதியில் உள்ள காலி இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குப்பை கொட்டுவதற்காக சென்றார். அப்போது, அங்கு சாலை ஓரம் ஈக்கள் மொய்த்தபடி பச்சிளம் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது குறித்து அவர் பல்லடம் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தார். அதைத்தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் அங்கு குழந்தையின் உடலை மீட்டனர். அது சுமார் 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை என்பது தெரியவந்தது. பின்னர் அந்த பச்சிளங்குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மோகன்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால் அந்த பெண் குழந்தையை அதன் தாய் யாருக்கும் தெரியாமல் அங்கு வீசி சென்றாரா அல்லது கள்ளக்காதல் போன்ற தகாத உறவு முறை காரணமாக பிறந்ததால் குழந்தையை வீசி சென்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்