தஞ்சாவூர்
பாபநாசம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
|பாபநாசம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
பாபநாசத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்பவனி கடந்த 7-ந் தேதி சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று தேர்பவனி சிறப்பு பாடல் திருப்பலியுடன் நடைபெற்றது. இதற்கு செபஸ்தியார் திருதலத்தின் பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்து தேர்பவனி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் வாணவேடிக்கையுடன் புறப்பட்டு பாபநாசம் முக்கிய வீதி வழியாக சென்று பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது.
இதில் கபிஸ்தலம் பங்கு தந்தை அமல்ராஜ், புனித செபஸ்தியார் ஆலயத்தின் இணை பங்குத்தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் மற்றும் பாபநாசம் புனித அந்தோணியார் ஆலயத்தின் பங்குமக்கள், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.