< Back
மாநில செய்திகள்
பி.ஏ.பி. கால்வாயில் கார் பாய்ந்தது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பி.ஏ.பி. கால்வாயில் கார் பாய்ந்தது

தினத்தந்தி
|
4 Oct 2023 12:30 AM IST

சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி. கால்வாயில் கார் பாய்ந்தது. இதில் விவசாயி உயிர்தப்பினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா தேவனூர் புதூரைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). விவசாயி. இவர், நேற்று மாலை 3.30 மணி அளவில் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் சுல்தான்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் கதவை திறந்து வாய்கால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்த சதீஸை உயிருடன் மீட்டனர். பின் அவருக்கு முதலுதவி அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார், சூலூர் தீயணைப்புத்துறையினர் கிரேன் மூலம் கால்வாய்க்குள் பாய்ந்து விழுந்து கவிழ்ந்த காரை கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமாாா ஒரு மணி நேரத்திற்கு பின் காா் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகள்