< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற அய்யப்ப பக்தர்கள்
|20 Dec 2022 12:43 AM IST
இருமுடி கட்டி சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் சென்றனர்.
திருவரங்குளம்:
திருவரங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் பக்தர்கள் இருமுடி கட்டி, சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.