< Back
தமிழக செய்திகள்

திண்டுக்கல்
தமிழக செய்திகள்
பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்கள்

24 Dec 2022 12:30 AM IST
பித்தளைப்பட்டியில் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
திண்டுக்கல்லை அடுத்த பித்தளைப்பட்டியில், அய்யப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் வரதராஜப்பெருமாள் கோவில் மண்டபத்தில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை காளியம்மன் கோவில் முன்பு அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி வழிபட்டனர். இன்று (சனிக்கிழமை) சபரிமலை யாத்திரை செல்லும் அய்யப்ப பக்தர்கள் காளியம்மன் கோவில் முன்புள்ள அய்யப்பன் மணி மண்டபத்தில் இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.