< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்கள்
|19 Dec 2022 12:30 AM IST
போடி அருகே அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
போடி அருகே நாகலாபுரம் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக மேளதாளம் முழங்க புதிதாக திறக்கப்பட்ட ஆசிரமத்திற்கு பக்தர்கள் வந்தனர். பின்னர் அய்யப்பனுக்கு 1,008 விளக்குகளை ஏற்றி பூஜைகள் செய்து வழிப்பட்டனர். தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணியளவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் சிறுமிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அப்போது பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சரணம் கோஷமிட்டனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.