< Back
தமிழக செய்திகள்

நீலகிரி
தமிழக செய்திகள்
அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

23 Jun 2023 1:15 AM IST
அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
குன்னூர்
குன்னூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெலிங்டனில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி கட்டப்பட்டது. இங்கு அப்போதைய சபரிமலை பரம்பரை தலைமை குரு, அய்யப்பன் சிலையை பிரதிஷ்டை செய்தார். இத்தகைய பழமை வாய்ந்த அந்த கோவிலில் கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் மற்றும் செண்டை மேளத்துடன் அய்யப்பன் ஊர்வலம் நடந்தது. மேலும் உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சபரிமலை பரம்பரை தலைமை குரு பிரம்ம ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.