< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அய்யப்ப சுவாமி திருவீதி உலா
|13 Dec 2022 12:21 AM IST
அய்யப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது.
நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் அய்யப்ப சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அய்யப்ப சுவாமி, முருகன், விநாயகர் ஆகிய சுவாமிக ளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைதொடர்ந்து திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அய்யப்ப சுவாமி, முருகன், விநாயகர் ஆகிய சிலைகள் ரதத்தில் வைக்கப்பட்டு திருவீதி உலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.