< Back
மாநில செய்திகள்
அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

தினத்தந்தி
|
17 Nov 2022 6:45 PM GMT

சங்கராபுரம் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.

சங்கராபுரம்,

சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று மாலை அணிவித்து 48 நாள் விரதம் இருப்பார்கள். பின்னர் அவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். முன்னதாக அங்குள்ள அய்யப்ப சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேவபாண்டலம் குந்தவேல் முருகன் கோவிலில் உள்ள அய்யப்பன் கோவில், எஸ்.வி.பாளையம் தர்ம சாஸ்தா கோவிலில் உள்ள அய்யப்பன் கோவில் உள்பட பல்வேறு அய்யப்பன் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

மேலும் செய்திகள்