< Back
மாநில செய்திகள்
அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
21 Aug 2023 12:19 AM IST

நயினார்கோவில் அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

நயினார்கோவில்,

நயினார்கோவில் யூனியன் தாளையடிகோட்டை கிராமத்தில் காரையா அய்யனார்கோவில் உள்ளது. .நயினார்கோவில் பகுதியில் உள்ள தாளையடிகோட்டை, மேமங்கலம், பாப்பார்கூட்டம், சாலியவாகனபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களின் காவல் தெய்வம் காரையா அய்யனார் ஆகும். இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிேஷகத்தின் போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. முடிவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்