திண்டுக்கல்
அய்யம்பாளையம் பேரூராட்சி கூட்டம்
|பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் ரேகா அய்யப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் அய்யம்பாளையம் பேரூராட்சி 12-வது வார்டில் குட்டிக்கரடு செல்லும் பாதை, 15-வது வார்டில் பூஞ்சோலை சாலை, 3-வது வார்டு சின்னாற்றுக்கு செல்லும் பாதை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை ஆகிய இடங்களில் தார்சாலை அமைத்தல், 3-வது வார்டில் தேசிய தொடக்கப்பள்ளி செல்லும் பாதையில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்தல், 10-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் வடிகால் அமைத்தல் மற்றும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத்திட்டம், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவருக்கு மாத சம்பளம் போன்ற திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.