< Back
மாநில செய்திகள்
அய்யா வைகுண்டர் சப்பர பவனி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

அய்யா வைகுண்டர் சப்பர பவனி

தினத்தந்தி
|
5 March 2023 12:15 AM IST

கடம்பூரில் அய்யா வைகுண்டர் சப்பர பவனி நடந்தது.

கடம்பூர்:

கடம்பூர் அய்யா வைகுண்டர் நாராயண சுவாமி கோவிலில் 191-வது அவதார தின விழா நேற்று முன்தினம் மாலையில் ஊர் விளையாடுதலுடன் தொடங்கியது. இரவில் சிறப்பு பணிவிடை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது.

நேற்று காலையில் அய்யா வைகுண்டர் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு பணிவிடையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கடம்பூர் எம்.எஸ்.ஆர். குடும்பத்தினர் மற்றும் அய்யாவழி அன்புக்கொடி மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்