< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஒடுக்கப்பட்ட மக்களை காத்தவர் அய்யா வைகுண்டர்: கவர்னர் ஆர்.என்.ரவி
|3 March 2024 9:34 AM IST
அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
விஷ்ணு பகவானின் அவதாரமான அய்யா வைகுண்டரின் 192வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவும், சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கவும் தோன்றியவர் அய்யா வைகுண்டர். ஞானம் மற்றும் ஆன்மிகத்தின் ஊற்றாகவும் சனாதன தர்மத்தின் நியதியாகவும் விளங்கும் அவரது அகிலத்திரட்டு அம்மானை புத்தகம் மனிதகுலத்தை எக்காலத்திற்கும் வழிநடத்தும் என தெரிவித்துள்ளார்.