< Back
மாநில செய்திகள்
அய்யா வைகுண்டர் அவதார தினம்: மார்ச் 4ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!
மாநில செய்திகள்

அய்யா வைகுண்டர் அவதார தினம்: மார்ச் 4ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

தினத்தந்தி
|
22 Feb 2023 11:09 AM IST

அய்யா வைகுண்டர் அவதார தின விழா வருகிற மார்ச் மாதம் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

தென்காசி,

அய்யா வைகுண்டர் அவதார தின விழா வருகிற மார்ச் மாதம் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு ஏற்கனவே நெல்லை மாவத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தி நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தவிட்டிருந்தார். நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 11-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்