< Back
மாநில செய்திகள்
சாலை பணியாளர்கள்  மைல் கல்லுக்கு பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாட்டம்
மாநில செய்திகள்

சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2022 8:01 AM IST

கரூர் அருகே சாலை பணியாளர்கள் சாலையோர மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜையை கொண்டாடினர்.

கரூர்:

உலகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஆட்டோ டிரைவர்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் நபர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களை தூய்மையாக்கி பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்வார்கள்.

மேலும் வாழை மரக்கன்றுகள் கட்டியும், மலர் மாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். அவர்கள் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்வார்கள். பெரும்பாலானோர் தங்களின் வாகனங்களை கழுவி அதற்கு மாலை அணிவிப்பார்கள்

இந்நிலையில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே, சாலை பணியாளர்கள் சாலையோர மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜையை கொண்டாடினர்.

மேலும் செய்திகள்