< Back
மாநில செய்திகள்
ஆயுத பூஜை-விஜயதசமி தொடர் விடுமுறை: பயணிகள் ஊர்களுக்கு சென்று வர 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆயுத பூஜை-விஜயதசமி தொடர் விடுமுறை: பயணிகள் ஊர்களுக்கு சென்று வர 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தினத்தந்தி
|
20 Oct 2023 12:58 AM IST

ஆயுத பூஜை-விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி பயணிகள் ஊர்களுக்கு சென்று வர 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் சார்பில் வார விடுமுறை நாட்களான நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 23-ந்தேதி ஆயுத பூஜை, 24-ந்தேதி விஜயதசமி என தொடர் விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. அதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல வருகிற 24, 25-ந்தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்