< Back
மாநில செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; தமிழக மக்கள் வீடுகளில் தீபம் ஏற்ற கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்
மாநில செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; தமிழக மக்கள் வீடுகளில் தீபம் ஏற்ற கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

தினத்தந்தி
|
21 Jan 2024 11:51 PM IST

ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா 22-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக மக்கள் தங்களில் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக கவர்னர் மாளிகையின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தற்போது நாட்டு மக்கள் ராம பக்தியில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியிலும் இதை நான் பார்க்கிறேன், உணர்கிறேன். ஸ்ரீ ராமர் பாரதத்தின் தேசிய சின்னம். நாளை ஜனவரி 22-ந்தேதி அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவின் மூலம் தேசத்திற்கு ஒரு அற்புதமான ராமர் கோவில் கிடைக்கப் பெறும்.

இந்த வரலாற்று தினத்தை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். இந்த நாளை தமிழகத்தின் அனைத்து சகோதர, சகோதரிகளும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன் தீபம் ஏற்றி கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்